'ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலியே ராஜினாமா செய்' - கே.எஸ்.அழகிரிக்கு எதிராக அதிரடி போஸ்டர்!

அந்த போஸ்டர்
அந்த போஸ்டர்

தமிழக காங்கிரஸ் கட்சியின்  தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தமிழக அளவில் தனிப்பட்ட ஆதரவாளர்கள் இல்லாத நிலையிலும்கூட மாநிலத் தலைவராக காங்கிரஸ் கட்சியை திறம்பட வழி நடத்தி வருகிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக இவருக்கு கட்சிக்குள் கடும்  எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கலவரத்தில் அழகிரிக்கு முக்கிய பங்கு இருப்பதாக குமரி மாவட்ட காங்கிரஸ்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதன் காரணமாக அவர் விரைவில் மாற்றப்பட்டு தமிழகத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்  என்பதாக தகவல்கள் பரவிவருகிறது. இந்த சூழலில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நேற்று மாலை போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.  கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் உள்ள அந்த  போஸ்டர்களில் ‘காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுத்து வரும் ஊழல்வாதி, ஆர்.எஸ்.எஸ்ஸின்  கைக்கூலி   அழகிரியே ராஜினாமா செய்’ என்ற கடுமையான வாசகங்கள் உள்ளன. 

கே.எஸ். அழகிரிக்கு சொந்த மாவட்டத்தில் எதிர்ப்பாளர்கள் உள்ள நிலையில் மாநில அளவிலான பிரச்சினையை பயன்படுத்தி அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இப்படி சிதம்பரத்தில் போஸ்டர்கள்  ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in