`மதக்கலவரத்தை தூண்டுகிறார்; அண்ணாமலையை கைது செய்யவும்'

டிஜிபியிடம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு புகார்
`மதக்கலவரத்தை தூண்டுகிறார்; அண்ணாமலையை கைது செய்யவும்'

``எங்கள் அமைப்பு குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆடியோ வெளியிட்ட அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்" என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலாளர் நாகூர் மீரான், தமிழக டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே பாஜக முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நம்மை தாக்க கூடும் என அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுகின்ற அண்ணாமலையை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க கூடாது. காவல்துறை அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in