`சவால் விடும் வகையில் பொங்கல் அமைந்துள்ளது'- கனிமொழி

`சவால் விடும் வகையில் பொங்கல் அமைந்துள்ளது'- கனிமொழி

மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப கூடியவர்களுக்கு சவால் விடும் வகையில் பொங்கல் விழாவை நடத்தி வருவதாக திமுக துணை பொது செயலாளர் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் , துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பொங்கல் பண்டிகை ஒவ்வொரு மதத்திற்கு பொருந்த கூடிய பண்டிகை, எந்த மதத்தவராக இருந்தாலும் எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் என்ற உணர்வை பற்றி அனைவரும் கொண்டாடும் திருநாள் பொங்கல்.

நம்மை சீண்டி பார்க்க நினைத்தால், முதலமைச்சர் சொன்னது போல் ஒவ்வொரு விட்டு வாசலிலும் தமிழ்நாடு வாழ்க என்று சொல்லும் உணர்வு நம்மிடம் உள்ளது என தெரிவித்தார். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப கூடியவர்கள் சவால் விடும் வகையில் பொங்கல் விழாவை நடத்தி வருகிறோம்.

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என சிலர் கேட்கிறார்கள், ஏன் கேட்கிறார்கள் என தெரியும் என்ற அவர், கோயில்களை தனியாரிடம் இருந்த காலத்தை திராவிட இயக்கம் கடந்து தான் வந்துள்ளது தனியாரிடம் இருந்த போது,

கோயில்களில் எவ்வளவு நகை இருந்தது அது பிறகு என்ன ஆனது என தெரியாது என விமர்சித்தார்.

ஒரு சிலர் நம்மிடம் இட ஒதுக்கீடு வேண்டாம் என்பார்கள் ஆனால், கோயில்களில் மட்டும் வேறு யாருக்கும் இடமில்லை என தங்களுக்கு இட ஒதுக்கீடு செய்து கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

சமத்துவத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என திராவிட மாடல் ஆட்சி பாடுபட்டு கொண்டிருப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து பெண்களுக்கு பொங்கல் பரிசாக சேலைகளை கனிமொழி வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in