9 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள் உட்பட... 21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

மத்திய அமைச்சர் எல்.முருகன்(வலது), முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகியோர். உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை(இடது)
மத்திய அமைச்சர் எல்.முருகன்(வலது), முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகியோர். உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை(இடது)

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாளைய முதல்கட்ட வாக்குப்பதிவில், 9மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஒரு முன்னாள் கவர்னர் என 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் பரபரப்பு பற்ற இருக்கிறது.

நிதின் கட்கரி: மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரான இவர் தனது மூன்றாவது மக்களவை தேர்தலில், ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூரில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நாக்பூர் மேற்கு தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ விகாஸ் தாக்ரே போட்டியிடுகிறார். 2014-ல் முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ் முத்தேம்வாரை நிதின் கட்காரி தோற்கடித்தார். 2019 தேர்தலில் தற்போதைய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரான நானா படோலை நிதின் கட்காரி தோற்கடித்தார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

கிரண் ரிஜிஜு: மத்திய அமைச்சரான இவர் 2004-ம் ஆண்டு முதல் மேற்கு அருணாச்சல் தொகுதியில் இருந்து வாகை சூடி வருகிறார். வடகிழக்கு மாநிலத்தின் முக்கிய பாஜக முகமான ரிஜிஜு தற்போது, புவி அறிவியல் அமைச்சராக பணியாற்றுகிறார். முன்னதாக சட்ட அமைச்சராகவும் இருந்தார். இவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நபம் துகி போட்டியிடுகிறார்.

சர்பானந்தா சோனோவால்: 2016-ல் காங்கிரஸிடம் இருந்து பாஜக அஸ்ஸாமை கைப்பற்றியபோது, ​​சோனோவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, சோனோவால் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

ஜிதேந்திர சிங்: 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த ஜிதேந்திர சிங், உதம்பூரில் ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கிறார். இவர் காங்கிரஸ் தலைவர் சவுத்ரி லால் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இவர்களுக்கு அப்பால் பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன், சஞ்சீவ் பாலியன், நிசித் பிரமானிக் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் களத்தில் உள்ளனர். இவர்களுடன் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும். 1.87 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 16.63 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த இருக்கின்றனர். 7 கட்ட வாக்குப்பதிவுகளும் நிறைவுற்ற பின்னர் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெற உள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in