பீகாரில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு:எம்எல்ஏக்களுக்கு இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா திடீர் உத்தரவு!

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி
முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்த நிதிஷ் குமார், திடீரென அந்த கட்சிகளின் ஆதரவை கைவிட்டு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு முதல்வர் பதவி ஏற்றுள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அதில் அரசுக்கு எதிராக வாக்களித்து அரசை கவிழ்க்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

இந்நிலையில் நிதிஷ் குமார் அரசைக் காப்பாற்ற  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அதையடுத்து  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் 4 எம்எல்ஏக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டுள்ளார்.  

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

மெகாகூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) பிரிவு தலைவர் மெகபூப் ஆலம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சியை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து மாஞ்சி, ''எனது கட்சியின் 4 எம்எல்ஏ.க்களும் நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு காப்பாற்றப்படும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in