காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் வேட்புமனு ஏற்பு... பஞ்சாபில் போட்டியிடுகிறார்!

'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்
'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்

பஞ்சாபின் கதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியும், வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங்கின் வேட்புமனுவை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

தற்போது அசாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங்கின் சார்பில் மே 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அவரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், அவர் கதூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

முன்னதாக இது தொடர்பாக பேசிய அம்ரித் பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர், “தேர்தலில் போட்டியிட அம்ரித்பால் சிங்குக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்போது அவர் கதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் இருந்து தனது அரசியல் இன்னிங்ஸைத் தொடங்கப் போகிறார். இந்தத் தேர்தலில் அவர் எந்தக் கட்சியின் சார்பிலும் போட்டியிடமாட்டார். இந்தத் தேர்தலில் அவர் ஒரு சுயேட்சை வேட்பாளராகவே களமிறங்குவார்” என்று தெரிவித்திருந்தார்.

'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்
'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்

கடந்த ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் காவல்துறையினரால் காலிஸ்தானி ஆதரவு தலைவரான அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. அவரும் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரும் தற்போது அசாமின் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கதூர் சாஹிப் தொகுதியில் கடந்த 2019 இல் காங்கிரஸின் ஜஸ்பிர் சிங் கில் வென்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதில் காங்கிரஸ் சார்பில் குல்தீப் சிங் ஜிரா போட்டியிடுகிறார். அதே சமயம் பாஜக சார்பில் மஞ்சித் சிங் மன்னாவும், ஆம் ஆத்மி சார்பில் லால்ஜித் சிங் புல்லரும், அகாலி தளம் சார்பில் விர்சா சிங் வால்டோஹாவும் போட்டியிடுகிறார்கள்.

அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் சிங்

ஏழாவது கட்ட தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அப்போது கதூர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in