‘தந்தையைப் போல திமுகவை வழிநடத்துங்கள்’ - ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

‘தந்தையைப் போல திமுகவை வழிநடத்துங்கள்’ - ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

திமுகவின் 15-வது பொதுத்தேர்தலில் இரண்டாவது முறையாகக் கட்சியின் தலைவராக, போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'இரண்டாவது முறையாக திமுக தலைவராகத் தேர்வாகி இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தந்தையைப் போல் கட்சியைச் சிறப்பாக வழிநடத்தவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘திமுக தலைவராக இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதி தலைமையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மிகச்சிறப்பாகச் செயல்பட்ட மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது மிகவும் பொருத்தமானது ஆகும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ‘இரண்டாவது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு சார்பில் வாழ்த்துகள்’ எனக் கூறியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ‘மத்திய பாஜக அரசின் வகுப்புவாத போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’ எனக் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன், ‘இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in