ஈரோடு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள் எவ்வளவு?- முழு விவரம்

சில பரிசு பொருட்கள்
சில பரிசு பொருட்கள் ஈரோடு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள்: முழு விவரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும்  இடைத்தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை அள்ளி, அள்ளி கொடுத்து வருகின்றன. நேற்று இரவு வரை வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு பரிசு பொருட்கள் விவரம்:

1) வெள்ளிக் கொலுசு, 2) வெள்ளி டம்ளர், 3) எவர்சில்வர் தட்டு,     

4) எவர்சில்வர் குடம், 5) மில்டன் ஹாட் பாக்ஸ், 6) ஸ்மார்ட் வாட்ச், 7) பிரிஸ்டீஜ் பிரஸர் குக்கர், 8) அரிசி ஒரு சிப்பம், 9) காமாட்சி விளக்கு, 10) ராம்ராஜ் வேட்டி, 11) ராம்ராஜ் லினன் சட்டை, 12) ரூபாய் 900  மதிப்புள்ள புடவை, 13)  ஒரு ஓட்டுக்கு ரூபாய் 3000, 14) தினசரி மட்டன், சிக்கன்  பிரியாணி, 15) தினசரி ரூபாய் 1000 மற்றும் மது, 16) மூன்று வாரம் ஞாயிறு தோறும் 1.5 கிலோ  சிக்கன் மற்றும்1 கிலோ மட்டன், 17) 1000 ரூபாய் மதிப்புள்ள சென்னை சில்க்ஸ் கிஃப்ட்  கூப்பன், 18) ரூபாய் 2000 மதிப்புள்ள மளிகை கூப்பன். இவ்வளவும் நேற்று இரவு வரை வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் முக்கியமான நாள் இன்றுதான் என்பதால் இன்று பகல் மற்றும் இரவுக்குள் இதைவிட இன்னும் அதிகமான பரிசு பொருட்கள்  கிடைக்கும் என அங்குள்ள வாக்காளர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.  கதவை தட்டும் சத்தத்துக்காக அந்த மக்கள் காது கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். கதவைத் தட்டியதும் அதைத்திறந்தால் அங்கு உடனடியாக பரிசு பொருட்களுடன் யாராவது ஒருவர் நிற்கிறார். அரசியல் கட்சிகளே அச்சம் இல்லாமல் இன்னும்  அள்ளி வழங்குங்கள். ஜனநாயகம் மண்ணோடு மண்ணானாலும், அந்த மக்கள் பயன் பெறட்டும்.

பின் குறிப்பு: வாக்குக்கு பணம்,  பரிசுப் பொருட்கள் பெறுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அந்த மக்கள் கொஞ்சம் கூட உணரவில்லை, 'அவங்க அப்பன் வீட்டு பணத்துல இருந்தா கொடுக்குறாங்க,  எல்லாம் மக்களோட காசுதானே என்கிறார்கள். இதை  தவறு என்று ஏற்றுக் கொள்ளாமல் நியாயம் பேசும் நியாயவாதிகள். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in