
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கடுமையான சரிவை சந்திக்கும், கொங்கு மண்டலத்தில் கூட எடப்பாடி பழனிசாமி அடி வாங்குவார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் தனியாக கூட்டணி அமைப்போம். 2024, 2026 தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவரின் இந்த முடிவு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
``இப்போது அண்ணாமலை செய்யும் அளவிற்கு யாரும் திமுகவை எதிர்க்கவில்லை. அவருக்கு டெல்லி முழு ஆதரவு வழங்குகிறது. அவரை டெல்லி கைவிட்டுவிட்டதாக கூறுவது பொய். அதில் உண்மை இல்லை. அண்ணாமலை அடித்து மேலே வந்து கொண்டு இருக்கிறார்.
வடஇந்திய கருத்து கணிப்புகள் கூட இதைத்தான் சொல்கிறது. திமுக 56 சதவீதம் வருவார்கள் என்று சி வோட்டர் கூட சொல்கிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் கூட ஜாதி வேறுபாடு காரணமாக எடப்பாடி பழனிசாமி அடிவாங்குவார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுக நாயுடுகள், செங்குந்த முதலியார்கள், மற்ற கவுண்டர்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்புவார்கள். இதனால் கொங்கு எடப்பாடிக்கு பெரிய சவாலாக இருக்கப் போகிறது. காலில் விழக்கூடிய எடப்பாடி என்ற கவுண்டரா? , நிமிர்ந்து நிற்க கூடிய அண்ணாமலை என்ற கவுண்டரா என்று அவர்கள் பார்க்கலாம்.
எங்களது கணிப்பின்படி தென் மண்டலத்தில் 5 இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் காலி. இஸ்லாமிய வாக்குகள், முக்குலத்தோர் வாக்குகள், நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகள், பாஜக பிரிக்கும் வாக்குகளால் டெபாசிட் இழக்கும் நிலையில் அதிமுக உள்ளது.
கொங்கு மண்டலத்தில் 30 சதவீத வாக்குகளை அதிமுக வாங்கும். ஆனாலும் பழைய முறை அளவிற்கு சாதகமாக இருக்காது. ஜெயலலிதா இருந்தபோது நிலவிய சாதகமான சூழ்நிலை இருக்காது. மற்ற ஜாதி வாக்குகள் எடப்பாடிக்கு எதிராக செல்லும்.
அண்ணாமலையிடம் வெள்ளாள கவுண்டர் வாக்குகள், வடஇந்தியர்கள் வாக்குகள், கவுடா நாயக்கர் வாக்குகள் ஆகியவை வரும். இதனால் கொங்கு மண்டலத்திலும் எடப்பாடிக்கு எதிராக வாக்குகள் திரும்பும். கள்ளர் சமூகத்தின் காலில் எடப்பாடி விழுந்தார் என்று கொங்கு மண்டல கவுண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கில் அதிமுக மோசமாக தோல்வி அடைந்ததற்கு காரணம் இதுதான். கொங்கு மண்டலத்தில் எடப்பாடி தோல்வி அடைவார் என்பதற்கு இதுவே சாட்சி.
கொங்கு மண்டல கவுண்டர்கள் எடப்பாடிக்கு எதிராக செல்வார்கள். இதனால் எடப்பாடிக்கு எதிராக கண்டிப்பாக தேர்தல் திரும்பும். அவரை இந்த முறை கொங்கில் இருக்கும் ஜாதி அமைப்புகள் காப்பாற்றாது. அண்ணாமலை பக்கம் தேசிய அரசியல், ஜாதி அரசியல் காரணமாக இவர்கள் எல்லாம் ஒன்று கூடுவார்கள்'' என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!