பாதுகாப்பு வளையத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள்: ஈரோடு முழுவதும் போலீஸ் அலர்ட்

பாதுகாப்பு வளையத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள்: ஈரோடு முழுவதும் போலீஸ் அலர்ட்

கோவை, திருப்பூரில் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது 22-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி சென்றார்.  அதுபோல், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர்ப் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.  அத்துடன் அவர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பூர் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர் சம்பவங்களால் பாஜக பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தலைவர் சிலைகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, ஈரோடு மாநகர் பகுதியில் தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி அலுவலகம், பச்சப்பாளையம் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல் கோபி பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைகள், பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வழிபாட்டு தளங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட எஸ்பி சசி மோகன் உத்தரவின் பேரில் சுமார் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in