சனாதன ஒழிப்பு... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சனாதன ஒழிப்பு... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வீடு, அலுவலகத்திற்கு கூடுதலாக திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதன ஒழிப்பு குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லம் மற்றும் நீலாங்கரை சன் ரைஸ் அவென்யூவில் அமைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான இல்லத்தில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in