நீலகிரியில் அண்ணாமலை, எல்.முருகன் திடீர் தர்ணா... வேட்புமனு தாக்கலின் போது அதிமுக-பாஜக வாக்குவாதம்!

உதகையில் பாஜகவினர் மீது போலீஸார் தடியடி
உதகையில் பாஜகவினர் மீது போலீஸார் தடியடி
Updated on
2 min read

நீலகிரி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாஜகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

உதகையில் பாஜகவினர் மீது போலீஸார் தடியடி
உதகையில் பாஜகவினர் மீது போலீஸார் தடியடி

எல்.முருகன் ஹெத்தையம்மன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வருகை தந்தார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவே கூட்டத்தினர் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு, வேட்பாளர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மட்டும் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மற்றவர்கள் உதகை ஏடிசி திடல் அருகே காத்திருந்தனர். அப்போது அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் மனு தாக்கல் செய்வதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த பாஜக தொண்டர்
போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த பாஜக தொண்டர்

அப்போது பாஜகவினர் கூட்டமாக கூடியிருந்ததால் அவர்களை ஒதுங்கி செல்லுமாறு போலீஸார் வலியுறுத்தியுள்ளனர். பாஜகவினர் தொடர்ந்து சாலையை மறித்தபடி நின்று இருந்தனர். இதனால் போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தடியடியில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேருக்கு படுகாயம் என்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வேட்பு மனு தாக்கலுக்காக ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

போலீஸாரை கண்டித்து எல்.முருகன், அண்ணாமலை தர்ணா போராட்டம்
போலீஸாரை கண்டித்து எல்.முருகன், அண்ணாமலை தர்ணா போராட்டம்

பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் மீது தடியடி நடத்திய காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தரப்பில் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக உதகையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in