தனிநாடு கேட்கச்சொல்லும் ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும்: போலீஸில் பாஜக பரபரப்பு புகார்

தனிநாடு கேட்கச்சொல்லும் ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும்: போலீஸில் பாஜக பரபரப்பு புகார்

இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின மக்களைத் தனிநாடு கேட்டுப் பெறவேண்டும் என கருத்து பகிர்ந்து வரும் பாதிரியார் ஜகத் கஸ்பரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சிறுபான்மை அணி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பாதிரியார் ஜகத் கஸ்பர் மீது தேசவிரோத போக்கைக் கடைபிடிப்பதாக குற்றம் சாட்டி இன்று புகார் அளிக்கப்பட்டது.
இதன் பின் பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்ஸி தங்கையா கூறுகையில், " இந்தியாவில் உள்ள 40 சதவீதம் இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தனி நாடு கேட்க வேண்டும் எனவும், பிரதமர் கொடுக்கவில்லை என்றால் அயல் நாடுகளை வலியுறுத்தி தனிநாட்டை கேட்டு பெறவேண்டும் எனவும் பாதிரியார் ஜகத் கஸ்பர் ராஜ் தொடர்ந்து பேசி வருகிறார்" என்றார்.

ஜகத் கஸ்பர் ராஜ்.
ஜகத் கஸ்பர் ராஜ்.

"இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இது போன்ற சர்ச்சை கருத்துக்களைப் பாதிரியார் ஜெகத்கஸ்பர் ராஜ் பேசி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், இதுபோன்ற தேசவிரோதப் போக்கை கடைபிடித்து பேசிவரும் அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in