'இறுகிக் கிடக்கும் இதயங்களும் சிறிது மேம்பட்டால் சிகரம் தொடலாம்': திமுகவிற்கு ஆலோசனை கூறும் வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து'இறுகிக் கிடக்கும் இதயங்களும் சிறிது மேம்பட்டால் சிகரம் தொடலாம்': திமுகவிற்கு ஆலோசனை கூறும் வைரமுத்து!

’அருகிக் கிடக்கும் நிதியங்களும் இறுகிக் கிடக்கும் இதயங்களும் சிறிது மேம்பட்டால் சிகரம் தொடலாம்’ என திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக அரசு கடந்த 2021 மே 7-ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது. தற்போது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் பலரும் அரசுக்குப் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, திமுக அரசுக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதில், ’’ஈராண்டு ஆட்சியைச் செம்மனத்தோடு சிந்தித்தால் நன்மை மிகுதி இன்மை குறைவு என்பது புலப்படும்; முதலமைச்சரின் உழைப்பு உடலாற்றலை மீறியது வெள்ளம் போல் பள்ளம் நோக்கியே பாய்கிறது; அருகிக் கிடக்கும் நிதியங்களும் இறுகிக் கிடக்கும் இதயங்களும் சிறிது மேம்பட்டால் சிகரம் தொடலாம், தொடுவீர்! ’’ என அவர் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in