'புலியைத் தொட்டாலும் தொடுக, மொழியைத் தொடாது விடுக' - இந்தி திணிப்பு குறித்து வைரமுத்து ட்விட்

'புலியைத் தொட்டாலும் தொடுக, மொழியைத்
தொடாது விடுக' - இந்தி திணிப்பு குறித்து வைரமுத்து ட்விட்

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.

அலுவல் மொழி தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பரிந்துரையில் இந்தி மொழி திணிப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எங்களை ஆண்ட இஸ்லாமியரோ, தெலுங்கரோ, மராட்டியரோ, வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை.

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?. அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in