சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு... பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்கு!

எம்.எஸ்.ஷா.
எம்.எஸ்.ஷா.
Updated on
1 min read

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எஸ்.ஷா.
எம்.எஸ்.ஷா.

பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக நிர்வாகி ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாஜக நிர்வாகி தனியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று எனது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மீதும், சிறுமியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் நேரத்தில் பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in