இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பாமகவின் அரசியல் பயிலரங்கு: நாளை தொடக்கம்

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கு நாளை (மே 16) முதல் தொடங்குகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு தைலாபுரம் தோட்டத்தில் உள்ளது. அதன் அருகிலேயே பாமகவின் அரசியல் பயிலரங்கு இயங்கிவந்தது. கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசியல் பயிலரங்கம் இயங்காமல் முடங்கிப் போனது. கடந்த சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அதுமட்டும் இல்லாமல், அக்கட்சியைச் சேர்ந்த பலர் மாற்றுக் கட்சிகளில் ஐக்கியமாகினர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் புதுத்தெம்புடன் இயக்க, அரசியல் பயிலரங்க வகுப்புகளை மீண்டும் தொடங்குமாறு கட்சியினருக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பாமகவின் அரசியல் பயிலரங்கு நாளை முதல் தைலாபுரத்தில் தொடங்குகிறது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி இதைக் திறந்துவைக்கிறார். இந்தக் கூட்டத்தில் அரசியல், பொருளாதாரம், விழிப்புணர்வு உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in