சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குடோன்... போராட்டத்தில் குதித்த பாமக வேட்பாளர்!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபானக் கூடத்தை முற்றுகையிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபானக் கூடத்தை முற்றுகையிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா

திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குடோனுக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் பர்மிட் பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார்.

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபானக் கூடத்தை முற்றுகையிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபானக் கூடத்தை முற்றுகையிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் திலகபாமா. அப்படி அவர் திண்டுக்கல் புறவழிச் சாலையில் கொட்டப்பட்டி அருகே வந்தபோது, கள்ளத்தனமாக குடோன் ஒன்றில் மது விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபானக் கூடம்
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபானக் கூடம்

உடனடியாக அந்த மதுபான கூட்டத்திற்கு சென்ற திலகபாமா உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சியினர் அங்கே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை அறையில் வைத்துப் பூட்டினர். தொடர்ந்து காவல்துறைக்கும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் போனில் அழைத்து கள்ளத்தனமாக நடைபெற்று வரும் மது விற்பனை கூடத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் திலகபாமா. அத்துடன் அந்த குடோன் முன் அமர்ந்து அவர் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது விற்பனை செய்த குடோனுக்கு சீல் வைத்தனர். பின்னர் விற்பனையாளர் சேசு என்பவரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in