மேலிடத் தலைவர்களுடன் மட்டும் தான் பேச்சுவார்த்தை... பாமக முடிவால் பாஜக அதிர்ச்சி!

மோடியுடன் ராமதாஸ்
மோடியுடன் ராமதாஸ்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க மேலிடத் தலைவர்களுடன் மட்டுமே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில், பா.ம.க. உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணியை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  தமிழ்நாட்டில் பாஜக வலுவாக இல்லாத நிலையில் அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக கூட்டணியை அமைக்க பாஜக மேலிடம் மும்முரம் காட்டி வருகிறது. அதற்காக கூட்டணியை விட்டுப் பிரிந்த அதிமுகவை மீண்டும் இணைக்க அக்கட்சி ஆர்வமாக உள்ளது. ஆனால் அதிமுகவோ பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இந்நிலையில் பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டுள்ளது. அதற்காக அந்த கட்சிகளுடன் மறைமுக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் பாமகவும், தேமுதிகவும் கூட்டணி குறித்து தங்களிடம் யாரும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று அறிவித்துள்ளன. அதற்கு காரணம் பாஜக கூட்டணியில் இணைய இரண்டு கட்சிகளும் ஏகப்பட்ட நிபந்தனைகளை முன் வைக்கின்றன.

பாமக நிறுவனர் மற்றும் தலைவர்
பாமக நிறுவனர் மற்றும் தலைவர்

14 மக்களவைத் தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என்று பிரேமலதா அறிவித்துள்ளார். இதுபோன்று எந்த வெளிப்படையான நிபந்தனையையும் பாமக தெரிவிக்கவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளுமே மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பாமகவை பொறுத்தவரை மாநிலங்களவை உறுப்பினர் பதவி தராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மத்திய அமைச்சர் பதவி தரவேண்டும் என்ற நிபந்தனையை அழுத்தமாக முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக திட்டமிட்டுள்ளது.

கடந்த 2014 முதல் பா.ஜ.கவுடன் இணக்கமாக இருந்தும், பா.ம.க.வுக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அக்கட்சி கருதுகிறது. எனவே, இந்த முறை முன்கூட்டியே சில உறுதிமொழிகளை பெற வேண்டும் என்பதில், ராமதாஸ், அன்புமணி இருவரும் உறுதியாக உள்ளனர். 

பாமக உயர்மட்ட தலைவர்கள்
பாமக உயர்மட்ட தலைவர்கள்

எனவே, கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைவர் நட்டா அல்லது அவர்களின் நேரடி பிரதிநிதிகளிடம் மட்டுமே பேச வேண்டும், அவர்கள் உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் இணைவது என்றும், அப்படி  அல்லாத நிலையில்  அதிக தொகுதிகளை வாங்கிக்கொண்டு அதிமுக கூட்டணியில் இணையலாம் என்ற முடிவில் பாமக இருப்பதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in