எதிர்க்கட்சி என்பதற்காக திமுக அரசின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது!

பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு பளிச் பேட்டி
எதிர்க்கட்சி என்பதற்காக திமுக அரசின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது!
வழக்கறிஞர் கே.பாலு

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டி எனும் பாமகவின் அறிவிப்பு, ‘தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகிற கட்சி பாமக’ என்ற விமர்சன மழையில் அக்கட்சியை மீண்டும் மூழ்கடித்துள்ளது. இந்தச் சூழலில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவுடன் ஒரு பேட்டி.

திமுக ஆட்சியின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறோம் என்பதற்காக திமுக அரசின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பாமகவின் கோரிக்கையான வேளாண்மைக்கு தனி பட்ஜெட், நீர்ப்பாசனத் துறைக்கு தனி அமைச்சர், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது, வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகள் 21 பேருக்கு மணிமண்டப அறிவிப்பு போன்றவற்றை வரவேற்கிறோம். இன்னும் சொல்லப்போனால் திமுக கொண்டுவந்ததை அதிமுக ரத்து செய்வதும், அதிமுக கொண்டுவந்ததை திமுக நிறுத்தி வைப்பதுமான போக்கை கைவிட்டு, அதிமுக அரசு கொண்டுவந்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டிருக்கிறது இந்த அரசு.

அதேநேரத்தில், தங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன பல விஷயங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு. சலுகை அறிவிப்புகளைக்கூட விடுங்கள். ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று சொல்லிவிட்டு, அதை செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையிலேயே அதை உரிமை என்று சொல்லிவிட்டு, அதை தர மறுப்பது அநீதி. அதேபோல, மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யாமல் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிப்பது மக்களிடம் மறைமுகமாக பணத்தைப் பறிக்கிற செயல் என்று சொன்ன திமுக, இப்போது அதையே செய்கிறது. இப்போது நிதி நெருக்கடியை காரணம் காட்டி, நாங்கள் கொஞ்ச காலம் அதேபோல பணத்தைப் பறித்துக்கொள்கிறோம் என்கிறார்கள்.

எல்லா விஷயத்திலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற முனைப்போடு முதல்வர் செயல்படுகிறார். ஆனால், பல அமைச்சர்கள், மாவட்ட, வட்டச் செயலாளர்களோ வேறு மாதிரி செயல்படுகிறார்கள். சிலர் ஒரு டாஸ்மாக் கடைக்கு 10 ஆயிரம் தர வேண்டும் என்று வசூல் செய்கிறார்கள். இனிமேல் இதெல்லாம் எங்கள் கண்ட்ரோல் என்று பேசித் திரிகிறார்கள். இதற்கும் ஒரு கடிவாளம் போட வேண்டும்.

ஆளும் அரசு இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு அரசியல் கட்சியுமே சில கோரிக்கைகளை வைத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அரசு எதைச் செய்தாலும் இது எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று பாமக சொந்தம் கொண்டாடுகிறதே?

மற்றவர்களுடைய கோரிக்கை, போராட்டத்தால் வந்த திட்டங்களை பாமக சொந்தம் கொண்டாடுவதாக யாரும் சொல்லவே முடியாது. உதாரணமாக, வேளாண் பட்ஜெட் குறித்து சில விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருக்கலாம். ஆனால், அதைத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், நிழல் வேளாண் அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டது மருத்துவர் அய்யா என்பதை மறுக்க முடியுமா? பெரியார் பிறந்த நாளை சமூகநீதிநாள் விழாவாக கொண்டாடச் சொல்லி நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். திமுக அப்படிச் சொன்னதாக எங்காவது குறிப்பு இருந்தால் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in