`நம் பிரதமருக்கு காலம் ஆறுதல் கூறட்டும்'- அண்ணாமலை உருக்கமான இரங்கல்

`நம் பிரதமருக்கு காலம் ஆறுதல் கூறட்டும்'- அண்ணாமலை உருக்கமான இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தாயே நாளை காலை கதிரவனும் இவ்வாறே உதிப்பானா? தாயே சொல் உணர்வுகள் அத்தனையும் இழந்து சூனியமாய் கிடக்கிறேன்... இடிந்தன கனவுகள் என்ற தலைப்பில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவிதை.

அன்னையின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பால் அவரை இதயத்தில் வைத்து பூஜித்த பெருமகன் நம் பிரதமர். வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருந்த நம் பாரத பிரதமரின் அன்னையின் மறைவு செய்து இதயத்தில் பேரிடையாக இறங்கியது. அன்னையை ஆன்ம தத்துவமாக வழிபட்ட நம் பிரதமருக்கு காலம் ஆறுதல் கூறட்டும்... மறைந்த அன்னையின் ஆன்மா இறை நிழலில் அமைதியாக இளைப்பாறட்டும்... தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in