
மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, மிலாது நபி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், "சகோதரத்துவம் மற்றும் அன்பு, சமூகத்தில் பெருகட்டும்" என தெரிவித்துள்ளார். "இந்நாளில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ ஈத் முபாரக்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் முகமது நபியின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாது நபி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.