
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி, ஸ்டாலின் சென்னை மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் “மார்ச் 1 திராவிட பொன்நாள்”, “முயற்சி முயற்சி முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.