‘பிரதமர் மோடியின் கொள்கைகள் எதிர்காலத்தில் நாட்டையே உடைக்கும்’ - காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அதிரடி

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம் மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கி, எதிர்காலத்தில் நாட்டையே உடைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் ஊடகத் துறையின் பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், பாரத் ஜோடோ யாத்திரையின் போது மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாசர்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரதமர் மோடியின் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம், அரசியல் சர்வாதிகாரம் போன்ற கொள்கைகளால், எதிர்காலத்தில் நாடு உடையப் போகிறது. அது நடக்காமல் இருப்பதை ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் ஜோடோ யாத்திரை உறுதி செய்யும்” என்று அவர் கூறினார்.

2020ல் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசை விட்டு வெளியேறியதற்கான காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரமேஷ், மத்திய அமைச்சராக பதவியேற்பதற்காகவும், டெல்லியில் உள்ள 27, சப்தர்ஜங் ரோடு பங்களாவை திரும்ப பெறுவதற்காகவும் தான் அவர் கட்சியை விட்டு விலகினார் என கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in