பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு அதிரடியாக உயர்வு: சொந்தமாக கார் கூட இல்லையாம்!

பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு அதிரடியாக உயர்வு: சொந்தமாக கார் கூட இல்லையாம்!

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 26 லட்ச ரூபாய் அதிகரித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் சார்பில் பிரதமர், மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு ரூ 1,97,68,885 ஆக இருந்த பிரதமரின் சொத்துமதிப்பு இந்த ஆண்டு ரூ.2,23,82,504 ஆக அதிகரித்துள்ளது.

2022ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி பிரதமருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களை வைத்துள்ளார். பிரதமர் ரொக்கமாக ரூ.35,250 மட்டுமே வைத்துள்ளார். தபால் அலுவலகத்தில் ரூ.9,05,105 மதிப்பு தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் ரூ.1,89,305 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டையும் பிரதமர் மோடி வைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ல் நான்கு பேருடன் இணைந்து வீட்டுமனை ஒன்றை வாங்கினார். ரூ 1.1 கோடி மதிப்பிலான அந்த இடத்தை அவர் தானமாக அளித்துவிட்டார். எனவே தற்போது பிரதமரிடம் அசையாத சொத்துகள் எதுவும் இல்லை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in