`பிரதமர் மோடி வித்தியாசமான மனிதர்'- மாணவர்களுடன் உரையாற்றிய ஆளுநர் ரவி

`பிரதமர் மோடி வித்தியாசமான மனிதர்'- மாணவர்களுடன் உரையாற்றிய ஆளுநர் ரவி

``பிரதமர் மோடி வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து அனைத்து விதமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார்'' என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுதிய “Exam Warriors” என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்த பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை வழங்கினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இந்த புத்தகம் வழங்கப்படும். தேர்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் இந்த புத்தகம் உதவும். நம் பிரதமர் வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து அனைத்து விதமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். பாதுகாப்பாக வளர்ந்து வரவில்லை.

இந்தியா யாரால் ஆளப்படுகிறது? என்னாலோ, என்னை போல் பதவியில் இருப்பவர்களாலோ இல்லை. உங்களை போன்ற மாணவர்கள், இளைஞர்களால் தான். நீங்கள் பாறை போன்றவர்கள். உங்களது திறமையை வெளிக்காட்டுவதன்மூலம் தான் அழகான சிற்பமாக மாறுவீர்கள். வெளியில் இருந்து பார்த்தால் கரடுமுரடாகத் தான் இருக்கும். ஒருமுறை அது வெளிப்பட்டால்தான், அதன் மதிப்பு தெரியும்'' என பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in