
இந்தியாவின் முதல் அதிவேக உள்ளூர் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.
இந்தியாவில் மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில், உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்காக புறநகர் ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வழக்கமாக மிதமான வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில்கள், பயணிகள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் முதல் அதிவேக உள்ளூர் ரயில் சேவையான ’நமோ பாரத்’ உத்தரப்பிரதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாகிபாபாத் மற்றும் துஹாய் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் சேவை வழங்கப்பட உள்ளது.
இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் ரயிலில் பயணித்தார்.
அப்போது பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடிய அவர், பாடல்கள் பாடி மகிழ்ந்தார். இந்த புதிய வகை ரயிலில் மேல்பகுதியில் பயணிகளின் உடைமைகளை வைத்துக்கொள்ள இடம், வைஃபை மற்றும் ஒவ்வொரு இருக்கையிலும் சார்ஜிங் பாயிண்டுகள் உள்ளிட்டவை இருக்கும்.
மேலும் சொகுசு இருக்கைகள் மற்றும் கால் வைக்க அதிக பகுதி ஆகியவையும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர காலத்தில் கதவை திறப்பதற்கான வசதி மற்றும் ஓட்டுநருடன் பேசுவதற்கான வசதி ஆகியவை இந்த ரயிலில் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லி-காசியாபாத்-மீரூட் இடையே விரிவாக்கப்பட உள்ள இந்த ரயில் சேவை, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் 'ராபிட் எக்ஸ்' என்று பெயரிடப்பட்டிருந்த இந்த ரயில், நேற்றைய தினம் ’நமோ பாரத்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நாளை முதல் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!