பிரதமர் மோடி படிக்காதவர், இந்தியாவிற்கு படித்த பிரதமர் தேவை: ஆம் ஆத்மி கட்சி ஆவேசம்

அர்விந்த் கேஜ்ரிவால் பகவந்த் மான்
அர்விந்த் கேஜ்ரிவால் பகவந்த் மான்பிரதமர் மோடி படிக்காதவர், இந்தியாவிற்கு படித்த பிரதமர் தேவை: ஆம் ஆத்மி கட்சி ஆவேசம்

நாட்டில் பரவும் வெறுப்பை நிறுத்தவும், கொள்கைகளை உருவாக்கவும், நாட்டை கட்டியமைத்தவர்களின் கனவுகளை நனவாக்கவும் இந்தியாவிற்கு படித்த பிரதமர் தேவை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

"மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று" பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீநகரில் பேசிய ஆம் ஆத்மி ஊடக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நவாப் நசீர் அமான், "எழுத்தறிவற்ற ஒருவரால் நாட்டை நடத்த முடியாது. பிரதமர் மோடி தான் படிப்பறிவில்லாதவர் என்று கூறுகிறார். இந்தியாவிற்கு கல்வி கற்ற ஒருவர் தேவை, கொள்கைகளை உருவாக்க, வெறுப்பை நிறுத்த. இன்று, நாங்கள் 'மோடி ஹடாவோ-தேஷ் பச்சாவோ' என்ற தேசிய பிரச்சாரத்தை தொடங்குகிறோம். இதற்காக கட்சி விமர்சனங்களை எதிர்கொள்ளும். இப்பிரச்சாரத்திற்காக நாங்கள் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால் அது எங்கள் பிரச்சாரத்தை தடுக்காது” என்று கூறினார்.

மேலும், "நாம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேருவின் கனவை நனவாக்க வேண்டும் என்றால், நரேந்திர மோடி ஆட்சியைவிட்டு செல்ல வேண்டும். பிரதமர் மோடி நீதிமன்றங்கள், அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அவரது ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகிறார்.

நாம் சுதந்திரத்திற்காக புதிய போராட்டத்தை நடத்த வேண்டும், படித்த பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம், இந்து மற்றும் சீக்கியர்களும் நல்ல கல்வி, சுகாதாரம், அமைதியைப் பெற வேண்டும் என்று கனவு கண்டார்கள். ஆனால் இன்று, பாஜக அல்லாத கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புகிறது, ரெய்டு நடக்கிறது. ஆனால், அவர்கள் பாஜகவில் சேரும்போது தூய்மையாகி விடுகிறார்கள். தற்போதைய மத்திய அரசு ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது” என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in