காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசர் மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார்... ராகுல் காந்தியை சாடும் மோடி

பிரதமர் மோடி, ராகுல் காந்தி
பிரதமர் மோடி, ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசரான ராகுல் காந்தி மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுவதாக ராகுல் காந்தியை மீண்டும் சாடியுள்ளார் பிரதமர் மோடி.

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும் அதன் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளருமான ராகுல் காந்தியையும் குறிவைத்து தாக்கினார். காங்கிரஸ் கட்சி வம்ச அரசியலை ஆதரிப்பதாகவும், மக்களவைத் தொகுதிகளை மூதாதையர் சொத்துக்களாக கருதுவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களையும், அதன் ஆட்சியாளர்களையும் விட்டுவைக்காத மோடி "காங்கிரஸின் 'ஷேஜாதா'(பட்டத்து இளவரசர்) பயன்படுத்தும் மொழி எந்த ஒரு தொழிலதிபரையும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிக்க வைக்கும். மாவோயிஸ்டுகள் பேசும் மொழியைப் பயன்படுத்தி புதுமையான முறைகளில் காங்கிரஸ் பணம் பறிக்கிறது" என்று தாக்கினார்.

மேலும் "காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தங்கள் 'ஷேஜாதா'வின் தொழில் எதிர்ப்பு மற்றும் தொழிலதிபருக்கு எதிரான மொழியுடன் உடன்படுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்" என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் முடிவை கிண்டல் செய்த மோடி, ’எட்டு வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் என் அம்மாவின் இருக்கை இது என்று உரிமை கொண்டாடுவது போல் அந்த தொகுதிக்கு ராகுல் ஓடியிருப்பதாக’ சாடியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்களின் அடிப்படை வசதிகளை காங்கிரஸ் மறுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். மேலும் 18,000 கிராமங்களின் நிலை 18 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இருந்தது என்றும் குற்றம் சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in