நாட்டுக்காக ராணுவ வீரர்கள் பலியாகும் போதும், சுய விளம்பரத்துக்கு முக்கியம் தரும் மோடி- முன்னாள் கர்னல் தாக்கு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்யும் வேளையிலும், சுய விளம்பரத்திலும், பாராட்டிலும் திளைத்திருப்பவர் பிரதமர் மோடி’ என்று சாடி இருக்கிறார், முன்னாள் ராணுவ கர்னலும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பவருமான ரோகித் சவுத்ரி.

ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடித்ததற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் அவரது குறைபாடற்ற தலைமைத்துவம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டியும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புதனன்று நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியது.

இதனை நினைவூட்டிய கர்னல் ரோகித் சவுத்ரி, “எதற்காக இந்த கொண்டாட்டம்? நாட்டில் எத்தனை பெரிய சம்பவம் நடந்தாலும் இப்படி சுய விளம்பரத்தை நிறுத்தாமல் இருப்பது எவ்வளவு மோசமானது?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவின் இந்த கொண்டாட்டத்தை 2019 புல்வாமா தாக்குதல் தருணத்துடன் ஒப்பிட்டு, பிரதமர் மோடியை தாக்கியுள்ளார் கர்னல் ரோகித் சவுத்ரி.

கர்னல் ரோகித் சவுத்ரி
கர்னல் ரோகித் சவுத்ரி

“2019ல் எல்லை தாண்டிய ஊடுருவல் உச்சத்தில் இருப்பதாகவும், ராணுவத்தினர் பயணத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எடுத்துச் சொல்லப்பட்டது. எத்தனை கேட்டும் ராணுவ வீரர்களுக்கான விமான பயண வசதி அளிக்கப்படவில்லை. இதனால் சாலை வாயிலாக ராணுவ வீரர்கள் ஸ்ரீநகர் சென்றதில், பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி அவர்களில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சூழலிலும், பிரதம் மோடி தனது ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பை நிறுத்தவில்லை” என கர்னல் ரோகித் குற்றம்சாட்டினார்.

மேலும் ”2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கான மோசமான காலகட்டம் காத்திருக்கிறது. நடப்பாண்டில் இதுவரை 30க்கும் மெற்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லாது போகிறது” என்றும் தனது வருத்தத்தை அவர் பதிவு செய்தார். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோக்கர்நாக் பகுதி பயங்கரவாதிகள் தாக்குதல் உட்பட, ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் மரணங்கள் குறித்து கர்னல் ரோகித் அதிர்ச்சி தெரிவித்ததோடு, அதன் பின்னணி குறித்தும் தனது ஆற்றாமையை பதிவு செய்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in