ராணுவ வீரர்களுடன் தீபாவளி... 10வது ஆண்டாக கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி!

ஹிமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
ஹிமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். 10வது ஆண்டாக அவர் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது, காஷ்மீர் மற்றும் சீனா, பாகிஸ்தான் எல்லைகளுக்கு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகிறார். ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் அவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை கடைப்பிடித்து வருகிறார். இவ்வாண்டு தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வகையில் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு அவர் சென்றுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
ஹிமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

லெப்சா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருடன் அவர் தீபாவளியை கொண்டாடினார். ஹிமாச்சல் வருகை தந்த பிரதமரை, ராணுவ மேஜர், கமாண்டர்கள் ஆகியோர் வரவேற்றனர். அப்போது ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

முன்னதாக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ”எல்லா மக்களும், வாழ்வும், செழிப்பும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in