திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது... சேலம் மேடையில் எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி!

நரேந்திர மோடி
நரேந்திர மோடிஎஸ்.குரு பிரசாத்

தமிழகத்தில் தனக்கு கிடைத்து வரும் ஆதரவால் திமுகவிற்கு தூக்கம் தொலைந்து விட்டதாகவும், தமிழகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு குறித்து தான் நாடு முழுவதும் பேச்சாக உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டில் மட்டும் 6வது முறையாக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்எஸ்.குரு பிரசாத்

மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அமுமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஐஜேகே கட்சியின் பச்சைமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற படையின் தலைவர் ஜான்பாண்டியன், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழில் பேசி பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சை தொடங்கினார்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்எஸ்.குரு பிரசாத்

அவர் பேசும்போது, ”தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்து விட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றி தான் நாடு முழுவதும் பேச்சாக உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக கூட்டணிக்கு தான், என மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக வைத்திருக்க வேண்டும். திமுகவும் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது” என்றார்.

மோடி
மோடிஎஸ்.குரு பிரசாத்

மேலும், “தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக எப்படி எல்லாம் இழிவு செய்தது? அதிலிருந்து திமுகவினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காமராஜர் போல் மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி வருகிறோம். ஜி.கே.மூப்பனார் பிரதமராக வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரை காங்கிரஸ் கட்சி வளர விடவில்லை. இந்தியா கூட்டணியின் நோக்கம் மும்பை பொதுக்கூட்டத்தில் தெரிந்துவிட்டது. பெண்கள் இழிவாக பேசியிருக்கிறார்கள்.

நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கி வருகிறோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. சேலத்தின் உருக்குத் தொழில் பலன் அடையும் வகையில் 6,000 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். சேலம் பகுதியில் ரயில்வே கட்டமைப்புக்காக 260 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம்” என்று பேசினார்.

முன்னதாக படுகொலை செய்யப்பட்ட பாஜகவினரை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நா தழுதழுக்க பேசினார். குறிப்பாக ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது தொண்டர்களை எழுந்து நின்று ஒரு நிமிடம் ’ரமேஷ் புகழ் வாழ்க’ என்று கூறுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்று இருந்த தொண்டர்களும் எழுந்து நின்று ரமேஷ் புகழ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in