போதைக்கும்பலின் தலைமையகமே தமிழ்நாடுதான்... பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் தலைமையகம் தமிழ்நாட்டுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நமோ ஆப் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். நவீன ஏஐ தொழில் நுட்பத்தின் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேச, அது தமிழில் அனைவரும் கேட்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது. ’எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைகள் வழங்கினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அவ்வாறு பேசும் போது பிரதமர் நரேந்திர மோடி, ”போதைப் பொருள் மற்றும் போதைப் பழக்கம் நமது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த சில நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமையகம் தமிழ்நாடாக இருப்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவே நம் குடும்பம், நம் குழந்தைகள், நமது வருங்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டும்.”என்றார்.

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ (கோப்பு படம்)
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ (கோப்பு படம்)

மேலும், “இதை மக்கள் அனைவருக்கும் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் நுழையும் போதை பொருட்கள் மற்றும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக போராட பாஜக மட்டுமே போதுமானது. தமிழகத்தில் திமுக அரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் மோசமான நிலை உள்ளது. ஊழல் மலிந்து சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் இவர்களால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்தும் சாவடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள இந்த கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in