காங்கிரஸ் தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் அலைகின்றனர்: பிரதமர் மோடி ஆவேசம்

பிரதமர் மோடி
பிரதமர் மோடிகாங்கிரஸ் தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் அலைகின்றனர்: பிரதமர் மோடி ஆவேசம்

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக பொய்யான வாக்குறுதிகளின் பையுடன் அலைகின்றனர். நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் காங்கிரஸிடம் எந்த சாதகமான செயல்திட்டமும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் தேவாங்கேரேவில் இன்று நடைபெற்ற விஜய சங்கல்ப் யாத்ரே மகா சங்கம கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "நமது நாடு பல ஆண்டுகளாக அழுக்கான அரசியலில் சிக்கித் தவித்து வருகிறது. கர்நாடகம் நீண்ட காலமாக சந்தர்ப்பவாத மற்றும் சுயநல அரசாங்கங்களைக் கண்டு துன்புற்றது, இதனால் மாநிலத்தின் முன்னேற்றம் பாதித்தது. எனவே கர்நாடகா மாநிலத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். பாஜக மாநில வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது. எனவே, கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் தேவை.

கர்நாடகாவை வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு உந்து சக்தியாக மாற்ற பாஜக விரும்புகிறது. இருப்பினும், காங்கிரஸ் அதன் தலைவர்கள் சிலரின் பாக்கெட்டுகளை நிரப்புவதற்கான ஒரு வழியாக மட்டுமே கர்நாடகத்தை பார்க்கிறது. எங்கள் அரசு தலித்துகள், ஏழைகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளித்து வருகிறது. எங்களுடையது ஏழைகளுக்கு ஆதரவான அரசாக உள்ளது” என்றார்

மேலும், “ யாருக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காதபோது, கர்நாடகா மோசமான நிலையில் இருக்குமா இல்லையா? வலுவான நிலையான ஆட்சி வேண்டுமா, வேண்டாமா? முழு பெரும்பான்மை உள்ள ஆட்சி வேண்டுமா, வேண்டாமா?. நான் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும், உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றால், கர்நாடகாவில் பாஜகவின் வலுவான ஆட்சி எனக்குத் தேவைப்படும், மேலும் நீங்கள் பாஜகவை வெற்றிபெறச் செய்து அதன் வலுவான ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக பொய்யான வாக்குறுதிகளின் பையுடன் அலைகின்றனர். இமாசல பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் சமீபத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை . பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரசை நம்பலாமா? அவர்களை கர்நாடகாவிற்குள் அடியெடுத்து வைக்க வேண்டுமா அல்லது அவர்களை தூக்கி எறிய வேண்டுமா?. கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவர்களின் விளையாட்டை விளையாட வாய்ப்பளிக்கக் கூடாது.
நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் காங்கிரஸிடம் எந்த சாதகமான செயல்திட்டமும் இல்லை” என தெரிவித்தார்


தற்போதுள்ள கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in