அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்... கருத்துக்கணிப்பு கிடையாது... கருத்து திணிப்பு தான் நடக்குது... எடப்பாடி ஆவேசம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தமிழகம் வரும் போது ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்திருந்தால் பயன் கிடைத்திருக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை 7 சதவீத அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014ல் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போது, பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தது. தற்போது 2024ம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இன்னும் விலை குறைக்காமல் அதிகமான வரி போட்டு மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியுள்ளனர். இதனால் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்” என்றார்.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

மேலும், “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் அணையிலிருந்து ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு திமுக அரசு சரியான முறையில் அணுகாததால், உச்சநீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. இதனால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சில ஊடங்கங்கள் பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றது. அது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவும், காங்கிரஸும் அதிகமான நிதி பெற்றிருக்கிறது. திமுக 650 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்று இருக்கிறது” என்றார்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. அவரும், மத்திய அமைச்சர்களும் தமிழகத்திற்கு வரும்போது ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்து சென்றிருந்தால், ஏதாவது பயன் கிடைத்திருக்கும். அதிமுகவை அழிக்க ஒருவராலும் முடியாது. அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்றது. பல்வேறு திட்டங்கள் இல்லங்கள் தோறும் சென்றடைந்து இருக்கிறது. மக்களுக்கான சேவையை அதிமுக அளித்து வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மக்கள் எதிர்பார்க்கிற வெற்றி கிடைக்கும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in