மல்லிகார்ஜுன கார்கேவை குடும்பத்துடன் கொல்ல பாஜக வேட்பாளர் சதி: ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்

மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கேமல்லிகார்ஜுன கார்கேவை குடும்பத்துடன் கொல்ல பாஜக வேட்பாளர் சதி: ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மனைவி மற்றும் முழு குடும்பத்தையும் படுகொலை செய்ய பாஜக வேட்பாளர் ஒருவரால் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கர்நாடகா பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கலபுராகி மாவட்டத்தில் உள்ள சித்தப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், "கார்கே மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை அழிப்பேன்" என்று கன்னடத்தில் கூறியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய சுர்ஜேவாலா, "வரும் கர்நாடக தேர்தலில் முழுமையான தோல்வியை சந்திக்கும் பாஜக தலைவர்கள் இப்போது மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் ஊமையாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். கர்நாடக காவல்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையமும் அப்படியே இருக்கும். ஆனால் கர்நாடக மக்கள் வாய்மூடி இருக்க மாட்டார்கள், தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று கூறினார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார், "நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வோம். முழு விஷயத்தையும் விசாரித்து சட்டம் அதன் நடவடிக்கை எடுக்கும்" என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த ரத்தோட், “அந்த ஆடியோ போலியானது. என்னைக் கேவலப்படுத்துவதற்காக காங்கிரஸால் புனையப்பட்டது. கார்கே அல்லது அவரது குடும்பத்தினருக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதெல்லாம் பொய். அவர்கள் சில போலி ஆடியோவை இயக்குகிறார்கள். தோல்வி பயத்தில் காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது" என்று கூறினார்.

சித்தாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த பிரியங்க் கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரத்தோட் நவம்பர் 13, 2022 அன்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரியங்க் கார்கேவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in