இனி குழப்பம் ஏற்படாது; ஈசியா கண்டுபிடித்து விடலாம்: சென்னையில் மகளிருக்கு வருகிறது பிங்க் நிறப் பேருந்து

இனி குழப்பம் ஏற்படாது; ஈசியா கண்டுபிடித்து விடலாம்: சென்னையில் மகளிருக்கு வருகிறது பிங்க் நிறப் பேருந்து

சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் நிறத்தில் வண்ணம் மாற்றப்பட்டு வருகிறது.

2021 சட்ட மன்ற தேர்தலின் போது அனைத்து மகளிரும் மாநகர பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பணிப்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள் உள்பட அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளித்தது. அந்த அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்காக , ‘மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு’ எனக் குறிப்பிடப்பட்டு அதற்கான பயணச்சீட்டும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு, கிரீன் போர்டு, டீலக்ஸ் என பல்வேறு விதமான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இலவச பேருந்து எது என்ற குழப்பம் பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது. இலவச பேருந்து அல்லாமல் மற்ற பேருந்துகளில் பெண்கள் ஏறிவிடும் நிலை உள்ளது. இந்த குழப்பத்தைத் தவிர்க்கச் சாதாரண கட்டண பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அந்தப் பேருந்துகள் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இந்த பிங்க் நிறப் பேருந்துகளை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாளை தொடங்கி வைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in