அசோக் கெலாட்டுக்கு எதிராக பேசினேனா? - பதறியடித்து பதிலளித்த சச்சின் பைலட்

அசோக் கெலாட்டுக்கு எதிராக பேசினேனா? - பதறியடித்து பதிலளித்த சச்சின் பைலட்

ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக பேசியதாக வந்த செய்தியை சச்சின் பைலட் மறுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடும்பட்சத்தில், புதிய முதல்வராக சச்சின் பைலட்டை முன்னிறுத்துவது குறித்த விவகாரம் அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், ராஜஸ்தானின் முதல்வராக அசோக் கெலாட் நீடிக்கக் கூடாது என்றும், எம்எல்ஏக்களை ஒன்றிணைப்பது அசோக் கெலாட்டின் பொறுப்பு என்றும் காங்கிரஸ் மேலிடத்திடம் சச்சின் பைலட் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் உடனடியாக இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த பைலட், "தவறான செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது என்று நான் பயப்படுகிறேன்" என்று ட்வீட் செய்தார்.

இதன் பின்னர் அந்த செய்தி நிறுவனம், இந்த செய்தியை சச்சின் பைலட் மறுத்துள்ளார். காங்கிரஸின் உயர் மட்ட தலைவர்களிடமோ அல்லது ராஜஸ்தான் முதல்வரிடமோ தான் பேசவில்லை என்று சச்சின்பைலட் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

அசோக் கெலாட் தலைவராகும் பட்சத்தில் சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவியை வழங்கக்கூடாது என்றும், கெலாட்டின் ஆதரவாளர் ஒருவருக்கே பதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து 90 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை கட்சியின் மத்திய பார்வையாளர்களான அஜய் மக்கான் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில், முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தையும் இவர்கள் புறக்கணித்தனர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in