மாற்றுத் திறனாளிகளுக்கு தித்திப்பான செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கு தித்திப்பான செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “பிறப்பின் போது ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், விபத்தால் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் அவர்களைச் சிறப்புக் கவனம் எடுத்துக் கவனிக்க வேண்டும். அவர்களின் உடல் குறைபாடானது. ஆனால் அறிவு, திறன் குறைபாடானது அல்ல. சமூகத்தில் மற்ற தரப்பினர் பெறக் கூடிய அனைத்து தரப்பு வசதிகளையும் மாற்றுத் திறனாளிகளும் பெற்றிட வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கால் நனைப்பதற்கு தமிழக அரசு செய்து கொடுத்துள்ள வசதியை எல்லோரும் அறிவார்கள். மாற்றுத் திறனாளிகளின் உரிமை என நினைத்து நாம் உருவாக்கியதுதான் அந்த அன்புப் பாதை. அந்த பாதையில் சென்று கடல் அலையில் அவர்கள் கால் நனைத்த போது அவர்களின் மகிழ்ச்சியை நானும் பார்த்தேன்.

தடைகளை வென்று சாதனை படைத்த பலர் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள். விளையாட்டு வீரர் மாரியப்பன், தனது குறைகளை இளவயதிலிருந்தே எதிர்கொண்டு தடைகளை வெற்றித்தடங்களாக மாற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்ந்து வருகிறார். மதுரை மாணவி ஜெர்லின் அனிகா, தேசிய விருது பெற்ற அமர் சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன், சங்கரராமன் எனப் பலரை இதற்கு உதாரணமாச் சொல்லலாம். வருவாய்த்துறை மூலம் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத் திறனாளிகள் தற்போது 1,000 ரூபாய் ஓய்வூதியம் பெற்றுவருகிறார்கள். வரும் ஜனவரி முதல் அவர்களுக்கு 1,500 ரூபாயாக ஓய்வூதியம் உயர்த்திக் கொடுக்கப்படும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in