பேரூராட்சி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம்

பேரூராட்சி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பின் மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடந்தது. இதில் 21 மாநகராட்சிகளின் மேயர் பதவி உள்பட பெரும்பான்மை பதவிகளை திமுக கூட்டணியே கைப்பற்றியது. இந்நிலையில் திமுக கைப்பற்றிய பேரூராட்சிகள் சிலவற்றில் திராவிட இயக்கத்தலைவர்களின் புகைப்படங்களின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. குளச்சல், கொல்லங்கோடு, பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய நான்கு நகரசபைகளையும் திமுகவே கைப்பற்றியது. இதேபோல் குமரிமாவட்டத்தில் மொத்தமுள்ள 51 பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களை திமுக கூட்டணியே கைப்பற்றியது. அந்தவகையில் அழகியபாண்டியபுரம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயஷீலா கேட்சன் வெற்றிபெற்றார். இவர் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கேட்சனின் மனைவியாவார். இவர் அழகியபாண்டியபுரம் பேரூராட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று பதவியேற்றார்.

இந்த அறையில் பெரியார், அண்ணா, கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களோடு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in