பிலிப்பைன்ஸில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய மாணவர்கள்

பிலிப்பைன்ஸ் மாணவர்கள்
பிலிப்பைன்ஸ் மாணவர்கள்முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடிய பிலிப்பைன்ஸ் மாணவர்கள்

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் பயிலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, அதிமுகவினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் மருத்துவம் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து ஜெயலலிதா பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.

அங்குள்ள காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைமைகளை வழங்கி மகிழ்வித்துள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளை பிலிப்பைன்ஸில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கொண்டாடியது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ஜெயலலிதா குறித்து அங்கு இறுதியாண்டு பயிலும் மாணவர் பிரபு கூறுகையில், ’’தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர், அவர் இல்லாததை கொரோனா காலக்கட்டத்தில் தமிழகம் வர முடியாமல் தவித்தப் போது உணர்ந்தோம்’’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in