பாதுகாப்பில் இருந்த போலீஸ்; பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: கோவையில் இரவில் நடந்து என்ன?

பாதுகாப்பில் இருந்த போலீஸ்; பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: கோவையில் இரவில் நடந்து என்ன?

கோவையில் பாஜக அலுவலகம் மீது இரவில் பெட்ரோல் குண்டுவீச்சப்பட்ட சம்பவத்தை கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசினார். இது குறித்த புகாரின் பேரில் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினல் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு 8.40 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி சென்றார். ஆனால், பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இது குறித்து பா.ஜ.க அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான பா.ஜ.க அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். பெட்ரோல் குண்டு வீசப்படும் சிசிடிவி காட்சியை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in