நள்ளிரவில் முக்கிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: அதிர்ச்சி வீடியோ

நள்ளிரவில் முக்கிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு:  அதிர்ச்சி வீடியோ

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘ஏகேஜி’ கட்டிடம் உள்ளது. இதன்மீது நேற்று இரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 11.45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை நோக்கி வீசினார். இது கட்சி அலுவலகத்தின் வாயில் பகுதியில் விழுந்தது. இரவு நேரம் என்பதால் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இரவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்ததும், கேரளம் முழுவதும் இருக்கும் மார்க்சிஸ்ட் மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகம் வந்து குவிந்தனர். சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் வழியே தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக திருவனந்தபுரம் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டதைக் கண்டித்து கேரளம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். கேரளத்தில் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் தரப்பு இடையே கடந்த ஒருமாத காலமாக மோதல் நடந்துவருகிறது. பரஸ்பரம் இருதரப்பு கட்சி அலுவலகங்களும் சேதப்படுத்தப்பட்டு வருவதும் தொடர்கிறது. கடந்த வாரம் கூட வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகம் தாக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இந்தச் சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in