பெட்ரோல் குண்டு வீச்சு... கைதான ரவுடிக்கு தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பா?

பெட்ரோல் குண்டு வீச்சு... கைதான ரவுடிக்கு தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பா?

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று மாலை ரவுடி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கிண்டி போலீஸில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கைதான ரவுடி கருக்கா வினோத், என்ஐஏ-வால் கைதான தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த நபர்களுடன் தொடர்பில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 21ம் தேதி புழல் சிறையில் இருந்து வினோத் ஜாமீனில் வெளியே வந்த அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பில் கைதான நபர்களும் வெளியே வந்த போது வெளியான வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

இதனால் இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளனர். குறிப்பாக புழல் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டு அதன் மூலம் திட்டம் தீட்டி இந்த சம்பவம் அரங்கேறியதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்து சிறைத்துறை தரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் பிணையில் வெளியில் வருபவர்கள் மற்றும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பரிசோதனைக்கு பிறகு ஒரே நேரத்தில் விடுவிக்கப்படுவது வழக்கம் என்றும், சிறையில் இருந்த போது கருக்கா வினோத் அடைக்கப்பட்டிருந்த பிளாக் வேறு அதேபோன்று தடை செய்யப்பட்ட அமைப்பில் கைதானவர்கள் அடைக்கப்பட்ட பிளாக் வேறு என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பினரும் சிறையில் வெவ்வேறு பிளாக்கில் இருந்ததால் இரு தரப்பினரும் சந்திக்க வாய்ப்பில்லை எனவும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in