பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது?- காரணம் இதுதான்!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது?- காரணம் இதுதான்!

சென்னையில் 191-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை. அதே நேரத்தில் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு இதன் விலைகள் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு மேல் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தாமல் இருக்கிறது மத்திய அரசு. சில மாதங்களுக்கு முன்பு கடந்த பஞ்சாப், உ.பி. கோவை உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்துவிட்டது. இதனால் நடுத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் டீசல் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது.

அதே நேரத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைப்பதில்லை. தொடர்ந்து 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்கும், டீசல் ஒரு லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை அப்படியே இருந்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். இதனிடையே, குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5-ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in