`அவரது பேச்சு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது'- ஆ.ராசாவுக்கு எதிராக நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு!

`அவரது பேச்சு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது'- ஆ.ராசாவுக்கு எதிராக நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு!

இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் வெங்கடாச்சலம் என்ற குட்டி. நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் இன்று வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “நெல்லை பார் கவுன்சிலில் இருந்த போது என் செல்போனில் யூடியூப்பைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா இந்து மதத்தைப் பற்றி மிகவும் அவதூறாகப் பேசும் காட்சியைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இந்து மதத்தையும், இந்து மக்களையும் எம்பியாக இருக்கும் ராசா மிகவும் அநாகரிகமாகப் பேசுகிறார். ஒரு இந்துவாக இது எனக்குத் தாங்க முடியாத துயரத்தைக் கொடுத்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in