போலி அடையாள அட்டையுடன் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நுழைந்த நபர்கள்: பதறிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

போலி அடையாள அட்டையுடன் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நுழைந்த நபர்கள்: பதறிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பலர் போலி அடையாள அட்டையுடன் வந்திருப்பதாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பகீர் புகாரை கூறியுள்ளனர். இதனால், வானகரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் வானகரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். பொதுக்குழுவால் பூந்தமல்லி முதல் மதுரவாயல் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வாகன நெரிசலால் ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்டனர்.

இதனிடையே, பொதுக்குழு கூட்டத்திற்கு அடையாள அட்டைகளுடன் வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அப்போது, பலர் போலி அடையாள அட்டைகளுடன் கூட்டத்திற்கு செல்ல வந்துள்ளனர். ஒவ்வொருவரையும் சோதனை செய்தபோது அது போலி அடையாள அட்டை என்று தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். எதற்காக போலி அடையாள அட்டைகளுடன் வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வானகரத்தில் தொண்டர்கள் குவிந்து வருவதால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in