ஆடத்தெரியாதவர்கள் மேடை சரியில்லை என்று தான் கூறுவார்கள் : ஓபிஎஸ் குறித்து சி.வி.சண்முகம் விமர்சனம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்’’ஆடத் தெரியாதவர்கள் மேடை சரியில்லை என கூறுவார்கள் ’’ - ஓபிஎஸ் குறித்து சி.வி.சண்முகம் விமர்சனம்

ஓபிஎஸ் அணி தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, ஆடத் தெரியாதவர்கள் மேடைசரியில்லை என்றுத்தான் சொல்வார்கள். அவர்கள் குறித்தெல்லாம் பேசத் தேவையில்லை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்த பொதுக்குழு ஒப்புதல் கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இன்று சமர்ப்பித்தனர்.

இதன் பின்னர் கூட்டாக அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ‘’ பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்வின் அடிப்படையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு அதிமுகவின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார்’’ என தமிழ்மகன் உசேன் கூறினார்.

அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ‘’ 2646 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் அவர்களில் 145 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகள் பதிவு செய்யவில்லை. மீதமுள்ள 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் தென்னரசுவை முன்மொழிந்துள்ளனர். அதனைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து உள்ளோம்.

ஒரே ஒரு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது தவறு, அவ்வாறு இல்லை. ஈபிஎஸ் தென்னரசுவை பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை அவைத்தலைவர் ஏற்றுக் கொண்டார். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

ஓபிஎஸ் அணி தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, "ஆடத் தெரியாதவர்கள் மேடைசரியில்லை என்றுத்தான் சொல்வார்கள். அவர்கள் குறித்தெல்லாம் பேசத் தேவையில்லை’’ என்று சி.வி.சண்முகம் பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in