'சங்பரிவார்கள் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்கிறார்கள்’ - மணிசங்கர் அய்யர் பரபரப்பு கருத்து

'சங்பரிவார்கள் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்கிறார்கள்’ -  மணிசங்கர் அய்யர் பரபரப்பு கருத்து

சங்பரிவார்கள் மதம், ஜாதி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்கிறார்கள் என்றும், பாரத் ஜோடோ யாத்திரை அத்தகைய முயற்சிகளுக்கு எதிரான வெளிப்பாடு என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற 138வது நிறுவன தின விழாவில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மதம், மொழி, சாதி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், சங்க பரிவார் மக்கள் இந்தியாவை துண்டு துண்டுகளாக்கி வருகின்றனர். அவர்களின் தவறான செயல்களுக்கு எதிராக பாரத் ஜோடோ யாத்திரை இந்தியாவை ஒருங்கிணைக்கிறது. அதை நாங்கள் உணர்கிறோம்." என தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “ராகுல் காந்தி தனது யாத்திரையின் போது வெறுப்பு அல்லது வன்முறையைக் காண முடியவில்லை என்று கூறுகிறார், அதே நேரத்தில் மணிசங்கர் ஐயர் இந்தியா துண்டு துண்டாக உடைகிறது என்று கூறினார். இதில் எது சரி.

அதாவது, சர்தார் படேலால் இந்தியாவை இணைக்க முடியவில்லை, ராகுல் காந்தி பாரதத்தை இணைப்பார் என சொல்கிறார்களா?. ராகுல் காந்தி இந்தியாவை ஒன்றிணைப்பது பற்றி பேசுவதற்கு முன் தனது சொந்த கட்சியை சரிசெய்து ஒன்றிணைக்க வேண்டும். பிரிவினையின் போதுதான் இந்தியா உடைந்தது. சர்தார் படேல் மற்றும் அவரது பங்களிப்பை காங்கிரஸ் கட்சி குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதா" என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in