இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து அமைதியாக வெளியேறுகிறோம்… தொடர்ந்து எங்கள் போராட்டம் தொடரும்: போராட்டக்காரர்கள் அறிவிப்பு

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து அமைதியாக வெளியேறுகிறோம்… தொடர்ந்து எங்கள் போராட்டம் தொடரும்: போராட்டக்காரர்கள் அறிவிப்பு

அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதை அடுத்து, இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக இன்று வெளியேறினர்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சவேவின் அதிபர் மாளிகையில் நுழைந்ததைத் தொடர்ந்து ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்.

கடந்த சில நாட்களாக அதிபர் மாளிகையிலே போராட்டக்காரர்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்தனர். கூட்டாக சமைத்து சாப்பிட்டனர். அதிபர் மாளிகையில் தங்கியிருக்கும் போராட்டக்காரர்களின் வீடியோக்கள் நாளும் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கும் எதிர்ப்பு வலுத்த நிலையில், சிங்கப்பூர் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை அவரது ராஜினாமா குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில் இலங்கை அதிபர் மாளிகையில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் அமைதியாக இன்று வெளியேறினர். அப்போது அவர்களின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “நாங்கள் அதிபர் மாளிகையிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும் அமைதியாக வெளியேறுகிறோம்.தொடர்ந்து எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in